(உயிர்ப்பு ஞாயிறு தொடங்கி, அர்ச்.தமதிரித்துவத்தின் திருநாள் வரைக்கும் நின்றுகொண்டு சொல்லத்தக்கது).
பரலோகத்துக்கு இராக்கினியே மனங்களிகூறும்! அல்லேலூயா.
அதேதெனில் பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர்! அல்லேலூயா.
திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்தெழுந்தருளினார்! அல்லேலூயா.
எங்களுக்காக சர்வேசுரனை மன்றாடும்! அல்லேலூயா.
எப்பொழுதும் கன்னிகையான மரியாயே அகமகிழ்ந்து பூரிக்கக்கடவீர்! அல்லேலூயா.
அதேதெனில் ஆண்டவர் மெய்யாகவே உத்தானமானார்! அல்லேலூயா.
பிரார்த்திக்கக்கடவோம்.
சர்வேசுரா சுவாமி, உம்முடைய திருக்குமாரனுமாய் எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசுக்கிறீஸ்துவின் உத்தானத்திலே உலகம் களிக்க சித்தமானீரே. கன்னி மரியாயாகிய அவருடைய திருத்தாயாராலே நித்திய ஜீவியமான பரலோக வாழ்வை நாங்கள் அடையும்படிக்கு அநுக்கிரகம் பண்ணியருளும். இந்த மன்றாட்டுகளையெல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுகிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.