கிறீஸ்துவானவர் நமக்காக மரண மட்டும் கீழ்ப்படியலானார்.
மேலும் சிலுவையிலே மரித்தார்.
ஆதலால் சர்வேசுரன் அவரை உயர்த்தி எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பர.
பிரார்த்திக்கக் கடவோம்
சர்வேசுராசுவாமி, எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துநாதர் பாவிகளாகிய யூதர்களுடைய கையில் காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவையின் நிர்ப்பந்தத்தை அனுபவித்து இரட்சித்தருளின இந்தக் குடும்பத்தைக் கிருபைக் கண் கொண்டு பாரும். இந்த மன்றாட்டைத் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் ஏக தேவனுமாய் சதாகாலம் சீவியருமாய், இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சேசுநாத ரைக் குறித்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.