வல்லமை மிக்க மெழுகுதிரி ஜெபம்.

திரு இருதய ஆண்டவர்க்கு ஜெபம்.

எல்லாம் வல்ல இறைவனே, நான் மிகுந்த விசுவாசத்துடன் உம்மிடம் கெஞ்சிக் கேட்கிறேன். எனக்கு இத்துன்பகரமான வேளையில் உமது வல்லமையான கரங்களால் ஆறுதல் அளித்தருளும். என்னிடம் பாராமுகமாய் இராதேயும் நல்ல இயேசுவே. உமது கதவுகளை எனக்கு திறந்து விடும். உமது வல்லமையான கரங்கள் தாம் நான் விரும்பும் சக்தியை எனக்கு என்றும் அளிக்கவல்லன.

உங்கள் 3 கஷ்டங்களைக் கூறவும்.

என் ஆண்டவரே, இரந்து கேட்கும் பாவியான என் இதயத்தின் வேண்டுதலுக்கு செவிசாய்த்தருளும். உமது நித்திய வீட்டை நான் என்றும் அடைய எனக்கு என்றும்  வழிகாட்டியருளும்,

ஆமென்.

இயேசுவே எனக்கு உதவியருளும்.

என் ஒவ்வொரு தேவைகளின் போதும் தாழ்மையுடனும், நம்பிக்கையுடனும் உம்மிடம் வர இயேசுவே எனக்கு உதவியருளும்.

என் சந்தேகங்களில், கலக்கங்கள், சோதனைகளில் இயேசுவே எனக்கு உதவியருளும்.

என் நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், துன்பங்கள் வேதனைகளில் இயேசுவே எனக்கு உதவியருளும்.

மற்றவர் என்னை ஏமாற்றும் போது உம்மை மட்டும் நம்பியிருக்கும் எனக்கு இயேசுவே எனக்கு உதவியருளும்.

நீரே என் ஆண்டவர், மீட்பர் என நான் வரும் போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

என் வாழ்வில் எல்லா முயற்சிகளுமே தோல்விகளாக மாறும் போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

நான் பொறுமையிழந்து என் சிலுவைகள் துன்பத்தின் மீது துன்பத்தை தரும் போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

நான் தனிமையில் வருத்தத்திலும் வேதனையிலும் உழலும் போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

எப்போதும் எனது பலவீனங்கள் தோல்விகளின் போது இயேசுவே எனக்கு உதவியருளும்.

ஆமென்.

முக்கிய குறிப்பு:
இச் செபம் வல்லமை மிக்கது. உங்கள் வேண்டுதல் எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் இச்செபத்தின் மூலம் அடையலாம். மாதத்தின் முதல் வெள்ளியிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு இச்செபத்தை ஜெபிக்கவும். ஒவ்வொரு நாளும் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி ஜெபம் முடிய அணைத்து விடவும். 15 வது நாள் முழு மெழுகுவர்த்தியையும் எரிய விடவும். 15 நாளும் ஒரே மெழுகுதிரியை உபயோகிக்கவும்.