இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கட்டுகளை உடைக்கும் செபம்.

இயேசுவின் நாமத்தினாலும், இயேசுவின் வார்த்தையினாலும், இயேசுவின் பரிசுத்த இரத்தத்தாலும், என்னைத் தாக்கியுள்ள ஆவிகளின் கட்டுகளை உடைத்து செபிக்கிறேன். இயேசுவே, என்னை உமது பரிசுத்த இரத்த கோட்டைக்குள் வைத்து மறைத்துக் கொள்ளும். இயேசுவே, உமது சிறகுகளால் மூடிக் கொள்ளும். இயேசுவே, உமது தூய ஆவியால் மறைத்துக் கொள்ளும். உமது தூதர்களைச் சுற்றி காவல் புரியும்படி கட்டளையிட்டருளும்.

இயேசுவே, உமது நாமத்தினால், என்னிடம் உள்ள எல்லா தீமைகளையும், வெறுப்பின் ஆவி, குழப்பத்தின் ஆவி, இன்னும் உமக்கு விருப்பமில்லாதது எதுவோ அனைத்தையும் உமது பாதத்தில் வைக்கிறேன். இயேசுவே, உமது நாமத்தினால் கட்டி, உமது பரிசுத்த இரத்தத்தால் சுட்டெரித்தருளும்.

இயேசுவே, உமது பரிசுத்த இரத்தத்தால் என்னை அபிஷேகம் செய்யும் (33 முறை).

ஆமென்.