சமுத்திரத்தின் நட்சத்திரமே...

1. சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க! கடவுளின் கருணையுள்ள தாயே! எப்பொழுதும் கன்னிகையே! மோட்சத்தின் இனிய வாசலே வாழ்க!

2. கபிரியேல் தூதன் உரைத்த, மங்கள வாழ்த்துரையை ஏற்று, ஏவையின் பெயரை மாற்றிய தாயே! சமாதானத்தில் எங்களை நிலை நிறுத்துவீராக.

3. குற்றவாளிகளின் பாவ விலங்கை அறுப்பீராக. பாவ இருளில் உள்ளோருக்கு ஒளியருள்வீராக. எங்கள் எல்லா தீமைகளையும் நீக்கி நலன் அனைத்திற்காகவும் மன்றாடுவீராக.

4. தாயென்று உம்மைக் காட்டும் எங்களுக்காக உமது மகவாகப் பிறந்த தேவசுதன் உம் மன்றாட்டின் மூலம் எங்கள் வேண்டுதலை ஏற்பாராக.

5. கன்னியருள் சிறந்த கன்னிகையே! அனைவரிலும் மிக சாந்தமுள்ள அன்னையே! எங்கள் பாவங்களிலிருந்து எங்களை விடுவியும்; சாந்தமும் கற்பும் உள்ளவர்களாக்கும்.

6. பழுதற்ற வாழ்வை எங்களுக்குத் தாரும். உமது குமாரன் சேசுவை நாங்கள் கண்டு என்றும் மகிழ்ந்திருக்க எங்கள் பாதையை பத்திரமாய்க் காத்தருள்வீராக.

7. தேவ பிதாவுக்கும், துதி உயர் கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியான தேவனுக்கும், திரித்துவரான ஏக கடவுளுக்கும் புகழ்ச்சியும் மகிமையும் உண்டாவதாக.

ஆமென்.