அத்தியந்த மகிமையுள்ள பரலோக பூலோக இராசேஸ்பரியான பரிசுத்த தேவமாதாவே! உம்முடைய திருப்பாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக் கொடுக்கிறோம். இதை நீர் கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து, இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளினுடைய பலனை அடையவும், சுகிர்த போதனையின்படியே நாங்கள் நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும், பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் கண்டு களிகூர்ந்திருக்கவும் ஒத்தாசை பண்ணியருளும் தாயாரே!
ஆமென்.
ஆமென்.