வானமும் பூமியும் யாவும் படைத்த எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரினால் நலன்களெல்லாம் நமக்குப் பெருகுமாக!
இறைவா என் மன்றாட்டைக் கேட்டருளும். எங்கள் குரலொலி உம் திருமுன் வருவதாக!
செபிப்போமாக:
ஆண்டவரே! நாங்கள் செய்கிற வேண்டுதலைத் தேவரீர் தயாளக் கருணையுடன் கேட்டருள மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களுக்கு நீதியுள்ள ஆக்கினையாக வந்த இந்த பூச்சிகளுடைய நெருக்கடியை உமது இரக்கப் பெருக்கினால் நோக்கி உமது திருப் பெயருக்குப் பகழ்ச்சி உண்டாகும்படி அவைகளை நீக்கியருளும். அப்படியே இந்த துஷ்டப் பூச்சிகள் உமது ஆணையின் பலத்தினால் தூரத் தள்ளுண்டுபோகவும், இந்தப் பயிர்கள் விக்கினமின்றி நன்றாக விளையவும் இதில் உண்டாகிற பலனும் உமது பணி விடைக்கும், எங்கள் பிழைப்புக்கும் பிரயோசனமாகவும் கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.