மகா பரிசுத்த பரிசுத்த ஆவியே, நான் அன்றாட கடமைகளை செவ்வனே நிறைவேற்றவும், எனது இலட்சியத்தை அடையவும் நீரே எனக்கு வழிகாட்டுகிறீர். எனக்கு எதிராக பிறர் செய்யும் துரோகங்களை மன்னித்து மறக்கும் மனவலிமையைத் தருபவர் நீரே. என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீர் என் அருகிலிருந்து எனக்கு வழிகாட்டுகின்றீர். இதுபோல எனது அன்றாட வாழ்வில் நீர் செய்து வருகின்ற அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகின்றேன். நான் உம்மை விட்டு ஒருபோதும் பிரியாதிருக்கும்படி உமது அக்னியின் ஆவியால் என்னை அணைத்துக் கொள்ளும். நான் என்றும் உம்முடன் இருந்து உமது முடிவில்லா மகிமையில் பங்குபெறவே விரும்புகிறேன். எனக்கு ஊட்டமளிக்கும் பரிசுத்த ஆவியே, எனை என்றும் பிரியாத துணையாளரே, எளியேனின் எளிய உள்ளத்து ஆவலை ஆசீர்வதித்தருளும்.
ஆமென்.