பரிசுத்த ஆவியாரிடம் புனித அகுஸ்தினார் செபித்த செபம்.

பரிசுத்த ஆவியே, என் மேல் உமது ஆவியைப் பொழிந்தருளும்; அதனால் என் எண்ணங்கள் எல்லாம் புனிதம் பெறும். பரிசுத்த ஆவியே, என்னில் அசைந்தாடும்; அதனால் என் வேலை புனிதம் அடையும். பரிசுத்த ஆவியே, என் இதயத்தைக் கவர்ந்து இழுத்திடுக; அதனால் புனிதத்தை மட்டுமே அன்பு செய்வேன். பரிசுத்த ஆவியே, புனிதமானவற்றையெல்லாம் பாதுகாக்க என்னைப் பலப்படுத்தியருளும். பரிசுத்த ஆவியே, நான் எந்நாளும் புனிதமுடன் வாழ என்னை பேணி பாதுகாத்தருளும்.

ஆமென்.