ஆண்டவரே அளவில்லா வேதனையில் உம்மை நோக்கி கூவி அழைக்கின்றேன்.
ஆண்டவரே என் கூக்குரலுக்கு செவிசாய்த்தருளும். என் வேண்டுதலின் குரலை உம் செவிகள் கவனமுடன் கேட்கட்டும்.
ஆண்டவரே! யான் செய்த பாவங்களை நினைவுகூர்வீராகில் உமக்கு முன் யார் நிற்க முடியும்?
வணக்கமுடன் நாங்கள் உமக்கு ஊழியம் செய்யுமாறு, நீர் பாவங்களை மன்னிக்கின்றிர்.
ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறேன், அவரது வாக்குறுதியில் என் ஆன்மா நம்பிக்கை கொண்டுள்ளது.
என் ஆன்மா ஆண்டவரை எதிர்நோக்குகின்றது. இரவின் காவலர் உதயத்தை எதிர் நோக்குவதைவிட, அதிக ஆர்வமுடன் எதிர்நோக்குகிறது.
காவலர் உதயத்தை எதிர்பார்ப்பதற்கு மேலாக, இஸ்ராயலர் ஆண்டவரை எதிர் பார்ப்பார்களாக.
ஏனனில் ஆண்டவரிடம் இரக்கம் உள்ளது, அவருடைய மீட்புத்துனை பொங்கி வழிகின்றது.
இஸ்ராயேலரை அவர் மீட்பார். அவர்கள் செய்த பாவங்களை் அனைத்தினின்றும் அவர்களை மீட்டுக்கொள்வார்.
நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமி. முடிவில்லாத பிரகாசம் அவர்களுக்குப் பிரகாசிக்கக் கடவது.
செபிப்போமாக;
சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா! மரித்த உமது அடியோகளுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாடுக்களை அங்கரித்து, அவர்கள் மிகுந்த ஆவலோடு விரும்பிக் காத்திருக்கிற பாவப் பொறுத்தலை கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்ளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசு நாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.
ஆமென்.
நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமி. முடிவில்லாத பிரகாசம் அவர்களுக்கு பிரகாசிக்கக் கடவது.
அவர்கள் சமாதானத்தில் இளைப்பாறக் கடவார்களாக.