கனிவு நிறைந்த குழந்தை இயேசுவே, என் மேல் நீர் பொழிந்தருளிய எல்லா நன்மைகளுக்காகவும் முழந்தாளிட்டு உமக்கு மனம் நிறைந்த என் நன்றியைச் செலுத்துகிறேன். உமது இரக்கத்தை நான் எனறும் போற்றிப் புகழ்வேன். நீர் ஒருவரே என் இறைவன், என் துணைவன் என்று பறைசாற்றுவேன். என் நம்பிக்கை எல்லாம் இனி உமது கையிலேதான். உமது இரக்கத்தையும், வள்ளன்மையையும் எங்கும் விளம்பரம் செய்வேன். உமது பேரன்பையும், பெரும் செயல்களையும் எல்லோரும் ஏற்றிப் போற்றுவார்களாக. குழந்தை இயேசுவின் பக்தி மக்கள் உள்ளங்களில் அதிகமதிகமாகப் பரவுவதாக, உமது உதவியை பெற்று மகிழும் அனைவரும், உமது குழந்தைப் பருவத்திற்கு என்றும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்களாக; என்றென்றும் அவர்கள் உம்மைப் போற்றி மகிமைப் படுத்துவார்களாக.
ஆமென்.