அருள் நிறைந்த என் தாயே! தேவனுடைய அன்னையே! என்னையும் என் குடும்பத்தினரையும், எங்கள் உபகாரிகள், எங்களை பகைக்கிற மக்கள் அனைவரையும், இன்றைய என் அனைத்துச் செயல்களையும், நானின்று சந்திக்க இருக்கின்ற அனைவரையும் தாயே உம் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கிறேன். என்னில் உள்ள தீமைகளையும், பாவங்கள் அனைத்தையும் அகற்றியருளும், புனிதமாக பாதுகாத்தருளும். சாத்தானால் சோதிக்கப்படும் போது துணையாயிரும்.
தாயே உம் விசுவாச வாழ்வும் பிறர் அன்பும், சேவை மனப் பான்மையும் சகிப்பு தன்மையும் பொறுமையும் எனக்கும் தந்தருளும். என்னை என்றைக்கும் இயேசுவுடன் சேர்த்தருளும். உம்மை போன்று குழந்தை இயேசுவை எங்கள் உள்ளத்தில் சுமக்க வரம் தாரும். உம்மைப்போல இறைவனின் சித்தத்திற்கு பணிந்து வாழ எனக்கு உதவி புரிந்தருளும் தாயே ஆமென்.
"இதோ ஆண்டவருடைய அடிமை. உம்முடைய வார்த்தையின் படியே எனக்கு ஆகக்கடவதாக"
ஆமென்.
மாசில்லா கன்னியே மாதாவே! உம் மேல்
நேசமில்லாதவர் நீசரே ஆவார்.
வாழ்க! வாழ்க! வாழ்க!