7. குரு பீடத்தின் இடது பக்கத்திலே சுவிசேஷம் வாசிக்கிறபோது...


சுவிசேஷப் போதனையைச் சேசுநாதர் உலகத்துக்கு அறிவிக்கத் திருவுளமானாரென்று சிந்தித்துக்கொள்.

சுவாமி! உமக்குகந்த குமாரனாகிய சேசுக்கிறிஸ்துவின் திருவசனங்களைக் கேட்கச் சொல்லி தாபோரென்கிற மலையில் மூன்று சீஷர்களுக்கு அற்புதமாக உமது திவ்விய சித்தத்தால் அறிவிக்கத் திருவுளமானீரே! அப்படிப்பட்ட உம்முடைய ஏக சுதனின் போதனையை நாங்கள் கவனத்தோடு கேட்கும்படி எங்களுக்கு அநுக்கிரகம் பண்ணியருளவேணுமென்று தேவரீரை வேண்டிக்கொள்ளுகிறோம்.

ஆமென்.