ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் பூசையில்லாத இடங்களில் சொல்லுகிற பூசை மந்திரத்தின் முழு விளக்கம்.
திவ்விய பலிப்பூசை.
பூசையிலே சேசுநாதர் சுவாமி எழுந்தருளுகிறாரே! அவருடைய சந்நிதியிலே நானிருந்து பூசைத் தியானம் பண்ணப் பாத்திரமாகாதவனாயிருந்தாலும், அவருடைய அளவில்லாத தயவை நம்பிக் கொண்டு பக்தியோடு செபம் செய்யப் போகிறேன்.
பூசையிலே அர்ச்சியசிஷ்ட தமதிரித்துவத்திற்குத் தோத்திரம், சம்மனசுகளுக்கு ஆனந்த சந்தோஷம், பாவிகளுக்குப் பாவப் பொறுத்தல், புண்ணியவான்களுக்கு இஷ்டப்பிரசாதம், உத்தரிப்பு ஸ்தலத்திலே வேதனைப்படுகிறவர் களுக்கு ஆறுதல், திருச்சபைக்கு சேசுக்கிறீஸ்துவினால் விசேஷ உதவி, பூசை செய்கிற குருவானவருக்கு ஞான அமுதமும் பரமசஞ்சீவியுமாயிருகிறதும் அல்லாமல் தேவ நற்கருணையை உட்கொள்ளுகிறதினால் பாவப் பொறுத்தலும், ஆசாபாசக் கட்டுப்பாடும், ஞானத் தெளிவும், ஆத்தும சம்பூரணமும் புண்ணியத்தைச் செய்யத் திடமும், பசாசின் சோதனையை ஜெயிக்க உதவியும், விசுவாசத்தில் உறுதியும், நம்பிக்கையில் நாட்டமும், சிநேகத்தில் ஆர்வமும், பக்தியில் அபிவிருத்தியும் அடைந்து, சேசுகிறீஸ்துவோடும் திருச்சபையோடும் ஒன்றுபட்டிருக்கலாம்.
முதன் முதலில் பூசையிலே சேசுநாதர் சுவாமி தம்மைத் தாமே நம்முடைய பாவங்களுக்காக அநாதி பிதாவுக்குப் பலியாக ஒப்புக் கொடுத் தாரென்று அறிந்து பூசை செய்கிற குருவிடத்தில் அவர் இருக்கிறதாகச் சிந்தித்து மகா பக்தி நம்பிக்கையோடு பூசை காண்போம்.
அதிகமான பலனோடு பூசை காணத்தக்கதாக பூசைக்கிருத்தியங்களும் பரம அர்த்தங்களும் அவைகளுக்குரிய அர்த்தங்களும் வேண்டுதல்களும் வருமாறு...
தொடரும்...
குறிப்பு; இந்த தொடரில் வரும் செபங்களை தனியே சேமித்து வைத்துக் கொண்டு, அயல் நாட்டில் வசிப்பவர்கள், திவ்விய பலி பூசையை காண இயலாதவர்கள் பயன்பெற கேட்டுக்கொள்கிறோம். இந்த செபங்களை தியானித்து சொல்பவர்கள் பூசைப்பலியை பார்த்த பலன்களை அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் தந்திருக்கிறார்.