சதாகாலமும் ஆராதனைக்குரிய சர்வேசுரனும் என் ஆண்டவருமாகிய இயேசுவே! பூமண்டலத்தில் தேவரீருடைய மட்டற்ற மகிமைக்கு வேண்டிய ஆராதனை வணக்கமும், உமது அத்தியந்த பற்றுதலுள்ள அன்புக்குத் தக்க பிரதியன்பும் செலுத்தப்படாத எவ்விடத்திலுள்ள தேவாலயங்களிலும் அடியேனிருந்து தேவரீரை ஆராதிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் இத்தனைத் தலங்களிலே இருக்க என்னாலே கூடாமையால், அவசங்கைப்பட்ட அந்த தேவாலயங்களில் நினைவின் வழியாயாவது பிரவேசித்து, கிறிஸ்தவரல்லாதார், பொல்லாத கிறீஸ்துவர்களால் எப்போதாகிலும் தேவரீருக்குச் செய்யப்பட்ட நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக, உம்முடைய நேச பரிசுத்த மாதாவின் அன்பையும் ஆராதனயையும் உமது பீடத்தின்மேல் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
ஆமென்.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
ஆமென்.