அனந்த நேசத்துக்குரிய இயேசுவே! உமது திருவாக்கினால் வெளிப்படுத்தவும் சாதாரண திருச்சபையாற் படிப்பிக்கவும், எண்ணிறைந்த அற்புதங்களால் நிச்சயிக்கப்பட்டதும் மறைபொருளுமாகிய திவ்விய நற்கருணையில் மெய்யாகவே எழுந்தருளியிருக்கிறீரென்று உறுதியாக விசுவசித்துத் தேவரீரை அந்தியந்த வணக்கத்துடனே ஆராதிக்கிறேன். இந்த பரம திருவருட்சாதனத்தில் தேவரீர் உண்மையாய் வீற்றிருக்கிறீரென்கிற சத்தியத்தின்பேரில் அவிசுவாசிகள் கொண்ட அநியாயச் சந்தேகங்களுக்குப் பரிகாரமாக, அடியேன் இறைவாக்குரைஞர்கள் தங்களுக்குத் தோன்றிய தேவ காட்சிகளையும் தேவ திருவுளம் தங்களுக்கு ஏவின திரு வாக்கியங்களையும் ஏற்றுக் கொண்ட பக்தி சிரவணக்கத்தையும், தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
ஆமென்.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
ஆமென்.