ஆராதனைப் பிரகரணம் 13.

சகல தகப்பன்மார்களிலும் அன்புள்ளவரும் அன்புக்குரியவருமாகிய திவ்விவிய இயேசுவே! உம்மை மிகுந்து நேசத்துடனே ஆராதிக்கிறேன். தேவரீர் அனந்த பட்சத்தோடு பிள்ளைகளாக ஏற்றுக்கொண்ட மனுமக்களின் அவிசுவாசத்துக்கும் நன்றிகெட்ட பாவதுரோகங்களுக்கும் பரிகாரமாக, உம்முடைய அப்போஸ்தலர்களின் திடனுள்ள விசுவாசத்தையும், நன்றியறிந்த நேசத்தையும், தர்ம நடபடிக்கைகளையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.