சர்வ நன்மைகளின் நிறைவான கருவூலமாகிய திவ்விய இயேசுவே! எல்லாவற்றையும் பார்க்கத் தேவரீரை அத்தியந்த பக்தி ஆசையோடு அபேட்சித்து ஆராதிக்கிறேன். நெறிகெட்ட அக்கிரமிகளால் தேவரீருடைய தேவாலயங்களில் செய்யப்பட்ட சகல திருட்டுகளுக்கும் பரிகாரமாக, அடியேன் உம்முளைய பிரமாணிக்கமுள்ள ஊழியர் உமக்குத் தோத்திரமாகச் செலுத்திய தாராளமான திரவிய தானங்களையும் பத்தியுள்ள காணிக்கைகளையுமல்லாமல் என்னை முழுவதும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
ஆமென்.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
ஆமென்.