சாதாரண திருச்சபையை விளக்கி உம்முடைய ஊழியர்களின் இருதயங்களிலே தேவ பத்தியாகிய சுவாலையை ஜொலிப்பிக்கிற சத்திய சூரியனாகிய இயேசுவே! தேவரீரை துதித்து ஆராதிக்கிறேன். உம்முடைய திருப் பணிவிடைக்குள்ளாகி தேவரீர் வீசுகிற தேவ சிநேகக் கதிரொளியை அடைந்திருந்தும், உஷ்ணமும் பற்றுதலும் அசைவுமின்றிக் குளிர்ந்தவர்களாய் நிற்கின்ற அநேகருடைய சோம்பல், அசதி, அசட்டைத்தனத்துக்குப் பரிகாரமாக, பக்திசுவாலகருடைய விருப்பப்பற்றுதலுள்ள நமஸ்காரங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
ஆமென்.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
ஆமென்.