மாசற்ற சர்வ பரிசுத்ததனத்துக்கு ஊருணியும் மூலமுமாகிய இயேசுவே! என்னாலியன்ற மட்டும் ஒடுக்க வணக்கத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். யூதாசென்கிற துரோகிக்கு இணையராய் நெறிகெட்ட முறையில், சிலர் கனமான பாவ தோஷமுள்ளஆத்துமத்தோடே தேவரீரைப் பலியிட்டு, திவ்விய நற்கருணை வழியாக உம்மை உட்கொள்ளும் அக்கிரம துரோகங்களுக்குப் பரிகாரமாக, பலவத்தருடைய பரிசுத்த தன்மையையும், அவர்கள் தேவரீரை ஆராதிக்கிற அனந்த பத்தியுள்ள ஆராதனைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
ஆமென்.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
ஆமென்.