அத்தியந்த பிரமாணிக்கத்துடனே சேவித்து, சர்வ மகிமை தோத்திரமும் செலுத்தப்படுவதற்கு உரியவராகிய உலக இரட்சகரே! தேவரீரை ஆராதித்து வணங்குகிறேன். சிலர் தங்கள் மனசாட்சியை விபரீதப்படுத்தித் தங்களை மோசம்போக்குகிற குருட்டாட்டத்துக்கும், பிறருக்குச் செய்கிற சதிமார்க்கங்களுக்கும் பரிகாரமாக, அதி தூதர்களுடைய சுறுசுறுப்புள்ள பிரமாணிக்க மனப்பற்றுதலைத் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.
ஆமென்.