குவாதலூப் தேவமாதாவுக்குப் பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

குவாதலூப் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நற்செய்தியின் விடிவெள்ளியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூரண நித்திய கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவனின் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகா வணக்கத்திற்குரிய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இரக்கம் நிறை அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை நம்பும் அடியவர்களின் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மைத் தேடுவோரின் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் வேதனைகளையும் வியாகுலங்களையும் குணமாக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் துன்பங்களைப் போக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிருபாகடாட்ச கண்களால் எங்களை நோக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அன்பையும் ஆறுதலையும் தரும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாழ்ச்சியுள்ளோரைத் தேர்ந்து கொள்ளும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அடியோர்களைக் கருணையால் உயர்த்தும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களைப் பாதுகாக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களை ஆதரிக்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் சந்தோசத்தின் ஊற்றே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச் சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச் யுவான் தியாகோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல புனிதர்களே, தூதர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஏசுக்கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய அற்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குவாடலூப்  அன்னையே, விண்ணக ரோஜா மலரே, இயேசுவின் திருச்சபைக்காகப் பரிந்து பேசும் அம்மா! திருத்தந்தையையும் உம்மைத் தேடி வரும் திருச்சபையையும் பாதுகாத்தருளும். இறைவனின் அன்னையே, நித்திய கன்னிகையே, விசுவாசத்தையும், நம்பிக்கையையும், துன்பத்தில் தளரா மனத்தையும் உமது திருமகனிடமிருந்து எங்களுக்குப் பெற்றுத் தாரும். எங்கள் இரட்சகரும் மீட்பருமான உமது திருமகனின் திருமுக தரிசனத்தை உமது பரிந்துரையால் நாங்கள் காணும் வரை எங்கள் இருதயங்களை அன்பினால் பற்றி எரியச் செய்தருளும்.

ஆமென்.