கருத்தாங்கிய பெண்களுக்காக ஜெபம்.

பூண்டி புதுமை தாயே, எங்கள் அனைவருக்காகவும் உம் திருமகனிடம் பரிந்து பேசும் அம்மா. ஜென்மப் பாவமில்லாமல் ஜெனித்து, மாசில்லாத உம் திருவயிற்றைக் கோவிலாக கொண்டு, இயேசு பாலனை தாங்க பேறுபெற்றவரே!

அம்மா கர்பினி பெண்களுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் எல்லாரும் உம் திரு மைந்தனின் அருளாசீரை பெற்று, எப்போதும் உமது நிழலில் அவர்கள் தங்கி, உமது அன்பை அடைந்து, அவர்கள் நன்முறையில் குழந்தைகளை பெற்றெடுக்க, எவ்வித ஆபத்துமின்றி காப்பாற்றும் தாயே!

ஆமென்.