நோய்களினால் பாதிக்கபட்டுள்ளோரை ஒப்புகொடுத்து செபம்.

ஆண்டவரே இன்று நோய்களினால் அவதிப்படும் எல்லா மக்களையும் பாதுகாத்தருளும். இந்த நாள்களில் ஆதரவின்றி துன்பபடுவோர், உடல் மற்றும் மன நோயினால் வேதனைப்படுவோர், கடன் பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடியில் நெருக்கப்படுவோர், மன அமைதியின்றி வாடுவோர் போன்றோரை உம்பாதம் தருகின்றோம்.

ஆண்டவரே, இவர் நீர் படைத்த பிள்ளை இறைவா! எல்லா உறுப்புகளையும் நீரே படைத்திருக்கிறீர்! இவைகளில் எதுவும் குறைவு படாமல் காத்தருளும் தந்தையே, உம்மால் கூடும் ஆண்டவரே,ஒரு வார்த்தை சொல்லும்,உம் மகன் குணமாவான். வல்லமையின் ஆண்டவர் இவரை தொட்டு குணப்படுத்தும்.

அப்பா உம்மையன்றி எங்களுக்கு வேறு எந்த கதியும் இல்லை. நீரே எம் உறைவிடம்.நீரே எங்கள் அரணும் கோட்டையுமாய் இருக்கிறீர்.

உம்மில் விசுவாசம் கொள்ளும் உம் பிள்ளைகளை கை விட்டு விடாதேயும். எனக்கு வலுவூட்டும் ஆண்டவரோடு நான் இணைந்திருந்தால் என்னால் எதையும் செய்ய முடியும் என்ற இறைவார்த்தைக்கேற்ப எல்லா மக்களும் உம்மோடு இணைந்து உமது உடலை உண்டு இரத்தத்தை பருகி தங்கள் வாழ்வினில் உம்மால் அதிசயங்களையும் அற்புதங்களையும் கண்டுனர்வார்களாக.

உமது ஆசீர்வாதம் சகல விதமான துன்பங்களினாலும் துடித்து கொண்டிருக்கும் மக்கள் மேல் என்றென்றும் இருப்பதாக,

ஆமென்