சங் சகோதரி பவுஸ்தீனாவின் நாள் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
மனுக்குலம் அனைத்திற்காகவும், குறிப்பாக எல்லாப் பாவிகளுக்காகவும்.
"இன்று மனுக்குலம் முழுவதையும் விசேஷமாய் எல்லாப் பாவிகளையும் என்னிடம் கூட்டி வந்து என் இரக்கக்கடலில் மூழ்கவை. இவ்வாறு ஆன்மாக்களின் இழப்பினால் கடுந்துயரத்தில் ஆழ்ந்துள்ள எனக்கு ஆறுதலளிப்பாய்" என்றார் சேசு.
இரக்கமுள்ள சேசுவே! எங்களுக்கு இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவரே! எமது பாவங்களைப் பாராமல், உமது அளவற்ற நன்மைத்தனத்தில் நாங்கள் கொண்டுள்ள எங்கள் நம்பிக்கையைப் பாரும். கருணை மிகுந்த உமது இதய இல்லத்தில் எங்களை ஏற்றுக்கொள்ளும். அதிலிருந்து நாங்கள் பிரிந்து போகவிடாதேயும். பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும், உம்மைப் பிணைக்கும் உமது அன்பைக் குறித்து உம்மை இறைஞ்சுகிறோம்.
நித்திய பிதாவே! சேசுவின் இரக்கம் நிறைந்த இருதயத்தில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ள மனுக்குலத்தின் மீதும், விசேஷமாய் பாவிகள் மீதும், உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். அவரது துயரம் நிறைந்த பாடுகளைப் பற்றி எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும். நாங்கள் எல்லா வல்லமையுமுள்ள உமது இரக்கத்தை என்றென்றும் புகழ்வோமாக.
ஆமென்.