புனித மரியாயே! யாரையும் கைவிடாதவரும் புறக்கணியதவருமான மோட்ச இராக்கினியே! எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் தாயே! பூலோகத்துக்கு ஆண்டவளே!
உம்முடைய கருணைக் கண்ணால் எம்மீது நோக்கி எங்களுடைய பாவங்களுக்கெல்லாம் உம்முடைய திருக்குமாரனிடம் இருந்து மன்னிப்பை அடைந்து தந்தருளும்.
உம்முடைய மாசற்ற உற்பவத்தை இப்போது மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறபடியால் கன்னிகையான நீர் பெற்றுவரும் ஏக திருத்துவத்தோடு சீவியருமாய் இராச்சிய பரிபாலன் செய்கிறவருமாய் இருக்கிற இயேசுக்கிறிஸ்து நாதருடைய தயையால் நித்திய பாக்கியமாகிய சம்பாவனையை இனி அடைவோமாக.
ஆமென்.