(பரலோக மந்திரம் சொல்லவும்.)
பரலோகத்திலே இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
மிகவும் மிகுந்த மதுரமான அர்ச்சிக்கப்பட்ட தேவ நற்கருணையே! எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
(இப்படி மூன்று தடவை சொல்லவும்.)