அதிகாலை செபம்

விடியற்காலை கண்விழிக்கும்போது

சேசு மரிய சூசையே! உங்கள் அடைக் கலத்திலே நான் கண்விழித்து யாதொரு பொல் லாப்பைக் காணாமலும் நினையாமலும் செய்யாமலும் இருக்கக்கடவேனாக.
ஆமென்.

எழுந்திருக்கிற பொழுது

சேசுநாதருடைய திருநாமத்தினாலே எழுந்திருக்கிறேன். படுக்கையிலே நின்று எழுந்தது போல பாவத்தை விட்டு எழுந்து மறுபடியும் நான் பாவத்தில் விழாதபடிக்கு என்னைத் தற்காத் தருளும் சுவாமி.
ஆமென்.

அதிகாலை ஜெபம் 

சேசுவே உமதன்பிற்காகவும் பாவிகள் மனந்திரும்பவும் மரியாயின் மாசற்ற இருதயத் திற்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இந்நாளை ஒப்புக்கொடுக்கிறேன்.

ஆமென்.