27. இயேசு சிலுவையில் மரணித்ததின் பேரில்


குன்றெனுங் கபாலவெற்பில், குரிசினில் தொங்கி அந்தோ, 
இந்தொடு இரவிதாரா, கணங்களுமிருண்டு பூமி, 
எண்டிசை கிடுகிடென்ன, ஏழுவாக்கியங்கள் செப்பி 
நின்னுயிர் விடலானீரோ நீதானே தயைசெய்வீரே.