சருவ வல்லமையுள்ள கடவுளே, சர்வ சத்தியத்திற்கும் சமாதானத்துக்கும் காரணமே! எல்லா மனுஷரின் இருதயங்களிலும் சமாதானத்தை விரும்பும் உண்மையான ஆசையை உண்டாக்கியருளும். பூமியின் சாதிகளின் நன்மைக்காக ஆலோசனை செய்கிறவர்களை உமது சுத்த சமாதான ஞானத்தினால் வழிநடத்தியருளும், பூமியானது உமது அன்பின் அறிவினால் நிரம்பும் வரைக்கும் சமாதான நிலையில் உமது இராச்சியம் முன்னேற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் கிருபை செய்தருளும்!
ஆமென்.