சபை ஐக்கியத்துக்காக செபம்.

கடவுளே, எங்கள் ஏக ரட்சகரும் சமாதானப் பிரபுவுமாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவே, சஞ்சலத்துக் கேதுவான எங்கள் பிரிவினைகளால் வரும் பெரும் மோசங்களை நாம் பயபக்தியோடு சிந்தித்து உணரும்படி அநுக்கிரகஞ் செய்யும். சகலவிதமான பகையையும், பிடிவாதத்தையும், திவ்விய ஐக்கியத்துக்கும் அந்நியோந்நியத்துக்கும் தடையாயிருக்கும் மற்றெல்லாவற்றையும் எங்களை விட்டகற்றியருளும்.

ஒரே சரீரமும் ஒரே ஆவியும் ஒரே நம்பிக்கைக் கேதுவான அழைப்பும் ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எங்கள் எல்லாருக்கும் ஒரே கடவுளும் பிதாவுமாயிருப்பதுபோல, நாங்கள் ஒரே இருதயமும், ஒரே ஆவியுமுள்ளவர்களாகச் சத்தியம், சமாதானம், விசுவாசம் என்னும் கச்சையினாற் கட்டப்பட்டு, ஒரே மனத்தினாலும், ஒரே வாக்கினாலும் உம்மை மகிமைப் படுத்துகிறவர்களாயிருக்கும்படி எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் எங்களுக்குக் கிருபை செய்தருளும்.

ஆமென்.