கடவுளே உமது தயவுள்ள சித்தத்தினால் தேசத்தின் பிரசைகளாகப் பிறந்திருக்கிற நாங்கள், எங்கள் தேசத்தை வார்த்தையினால் மாத்திரமல்ல, செய்கையினாலும் உண்மையாய் நேசிக்க உதவி செய்தருளும்.
நாங்கள் ஒருவருக்கொருவர் செய்ய வேண் டிய கடமைகளையும், சனசமுதாயத்திற்காகச் செய்யவேண்டிய கடமைகளையும், மன வாஞ்சையாய் நிறைவேற்றச் செய்தருளும். மனுஷரைக். கெடுக்கிற சகல தீமைகளையும், அவர்களை அடிமைகளாக்கும் கெட்ட வழக்கங்களையும், சீவியத்தை அந்தகாரப்படுத்தும் அறியாமையையும் எதிர்த்துப் போர் செய்ய எங்களைப் பெலப்படுத்தியருளும்.
எங்கள் தேசம் அவருடைய இராச்சியமாய் மாறவும், ஜீவனைக் கொடுக்கும் அவரது ஆளுகை எங்கள் மேலிருக்கவும் இயேசு கிறிஸ்துவிலுள்ள ஒளி, அன்பு, வல்லமை ஆகியன எங்கள் சபையில் வெளிப்படவும், எங்கும் பரம்பவும் செய்தருளும்.
அவருடைய நாமத்தில், அவருடைய மகிமைக்காக இவைகளைத் தாழ்மையாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.
ஆமென்.