இல்லத்தின் அரசி செபம்.

நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசனுகாதேவதாயே! உம்மை நாங்கள் எங்கள் வீட்டின் ஆண்டவளாகவும் எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கின்றோம். கொள்ளைநோய் மின்னல் இடி நெருப்பு புயல்க்காற்றுக்களிலிருந்தும் விரோதிகளின் பகை குரோதங்களிலிருந்தும் எம் வீட்டையும் உம் ஊரையும் பாதுகாத்தருளும். மிகவும் அன்புள்ளதாயே இங்கு வசிப்பவர்களை ஆசீர்வதித்தருளும். நாங்கள் வெளியே போகும் பொழுதும் உள்ளே வரும் பொழுதும் எங்களுக்குத் துணையாக இருந்து சடுதி மரணத்திலிருந்தும் சாவான பாவத்திலிருந்தும் சகல பொல்லாப்புக்களிலிருந்தும் எங்களைக் காத்துக்கொள்ளும் இவ்வுலகில் நாங்கள் சர்வேசுரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்தில் மோட்சமுகதரிசனையைக் கண்டுகளி கூர்ந்திருக்க ஒத்தாசை செய்தருளும் தாயே!

ஆமென்.