பிள்ளைகளை என்னிடத்தில் வர விடுங்கள், அவர்களைத் தடை செய்யாதிருங்கள்' எனக் கட்டளையிட்டு அவர்களை ஆசீர்வதித்த இயேசு கிறிஸ்துவின் பரம பிதாவே, கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என வெளிப்படுத்தியிருக்கிறீரே. எங்கள் பாடசாலைகளில் கல்வி கற்கும் எல்லாப் பிள்ளைகளையும், அவர்கள் உபாத்திமாரையும் உமது ஆசீர்வாதத்தால் நிரப்பும். உமது பிள்ளைகளின் மனங்கள் நல் அறிவினால் பிரகாசிக்கப்படவும், அவர்கள் இருதயங்கள் உம்மையும் உமது குமாரனையும் பற்றும் அன்புக்கும் நாளாந்தம் பரிசுத்தாவியானவரால் இழுக்கப்படவும் எங்கள் இரட்சகராயிருக்கிற இயேசு கிறிஸ்து மூலம் உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம்.
ஆமென்.