சர்வ சீவ தயாபர பிதாவாகிய கடவுளே, மனுஷ சாதியான சகல சனங்களையும் ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கிப் பூமியின் மேல் குடியிருக்கச் செய்து, தூரமானவர்களுக்கும் சமீபமானவர்களுக்கும் சமாதானத்தைக் கூறும்படி, உமது திருக்குமாரனை அனுப்பினீரே; தேசங்கள் எல்லாவற்றிலுமுள்ள சனங்கள், உம்மை நாடித் தேடிக் கண்டடையும்படி அருள் செய்து, மனுமக்கள் யாவர் மேலும் உம்முடைய ஆவியின் அனுக்கிரகத்தை மழைபோல ஊற்றி அருளுவோம் என்ற உமது திருவாக்கைச் சீக்கிரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.
ஆமென்.
ஆமென்.