ஆண்டவரே, அன்புள்ள கடவுளே, உம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்பி அவருடைய ஒளியினாலே, விசுவாசமுடைய ஜனத்தின் இருதயங்களைப் போதித்துப் பிரகாசிப்பித்தீரே; அந்த ஆவியினாலே நாங்களும் எல்லாக் காரியங்களையும் குறித்து நிதானமாய் யோசிக்கவும், அவருடைய பரிசுத்த தேற்றரவினாலே இடைவிடாமல் சந்தோஷிக்கவும் கட்டளையிட்டருள வேண்டுமென்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாகச் சதாகாலமும் சீவித்து அரசாளுகிற எங்கள் இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவின் புண்ணியங்களினிமித்தம் வேண்டிக்கொள்ளுகிறோம்.
ஆமென்.