எங்கள் இரட்சிப்பின் கடவுளே, மிகுந்த சந்தோஷத்தையுண்டாக்கும் சுவிசேஷத்தை எங்களுக்குத் தந்தருளியதுமன்றி, அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துதலை எங்கள் சீவியத்தின் சலாக்கியமும் உத்தரவாதமுமாக்கி இருக்கிறீரே!
தேவரீர் உமது சபையாராகிய நாங்கள் உம்முடைய இரட்சிப்பை நாளுக்குநாள் மற்றவர்களுக்குத் தெரிவிக்கும்படி எங்களை உமது ஆவியினால் ஏவியருள வேண்டுமென்றும், அங்கங்கே இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தும் உமது சுவிசேஷகருடைய ஊழியத்தை ஆசீர்வதித்து, அவர்கள் பேசும் சத்தியங்களைக் கேட்குஞ் சனங்கள் அவைகளை விசுவாசித்து, நற்சீர் அடையத்தக்கதாக உமது இரட்சிக்கும் புயத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றும், உம்மைத் தாழ்மையாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவும் வந்த எங்கள் அருமையான இரட்சகரின் மகிமை விளங்கும் பொருட்டு இப்படிச் செய்தருளும்.
ஆமென்.