மகா துக்க வியாகுலம் நிறைந்த சேசுநாதரே! தேவரீர் பட்ட சகல பாடுகளும் அடியேனுக்கு மோட்ச ஆனந்தமாகக்கடவது. உம்முடைய திருக்காயங்கள் என் துர்க்குணங்களுக்கு திவ்விய ஒளஷதமாகவும், உம்முடைய திரு உதிரத் தாரைகள் என் அசுத்தப் பாவங்களுக்குச் சுத்திகரமாகவும், உம்முடைய மரணம் எனக்குச் சுத்த சீவியமாகவும், இப்படியே இந்த திருப்பாடுகளில் எனது பாதுகாவலும் ஆரோக்கியமும் ஆனந்தமும் ஆத்தும் சரீரத்தின் சகல பேரின்ப ஆசை சம்பூரணமும் உண்டாவதாக, இப்பொழுதும் எப்பொழுதும் சதாகாலமும்.
ஆமென்.
ஆமென்.