இரட்சணியத்தின் செபம்

என் சர்வேசுரா சுவாமீ! உம்மை விசுவசிக்கிறேன். உம்மை நம்பியிருக்கிறேன். என் விசுவாசத்தையும் என் நம்பிக்கையையும் உறுதிப்படுத்தும். உம்மைச் சிநேகிக்கிறேன். உமது சிநேகத்தை எனக்கு இரட்டிப்பாய்க் கொடும்.

உமக்குப் பொருந்தாத பாவங்களை செய்தேன் என்கிறதினால் மனஸ்தாபமாயிருக்கிறேன். ஆனால் எனக்கு அதிகமான மனஸ்தாபத்தைக் கட்டளையிட்டருளும்.

சுவாமி, உம்மை என் ஆதியந்தமாக வணங்குகிறேன். நித்திய உபகாரியாக உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகிறேன். என் சலுகையாக உம்மை மன்றாடுகிறேன்.

என் சர்வேசுரா, உமது ஞானத்தால் என்னை ஒழுங்கு படுத்தும். உமது நீதியால் என்னை அடக்கும். உமது தயவால் எனக்கு ஆறுதலைத் தாரும். உமது வல்லமையால் என்னைக் காத்து இரட்சியும்.

சுவாமீ , இனிமேல் உம்மை நினைக்கவும் உம்முடைய காரியங்களைப் பேசவும், உமக்கு ஏற்கும்படி நடக்கவும், உமக்காகப் பாடுபடவும் வேண்டுமென்கிறதினால் என் சிந்தனை வாக்குக் கிரியைகளையும், எனக்கு வருகிற துன்ப துரிதங்களையும் உமக்கே தேவ வசீகரம் செய்கிறேன்.

சுவாமீ , நீர் வேண்டுமென்கிறதே உம்முடைய திருச்சித்த மாகையால் நானும் அதுவே வேண்டுமென்கிறேன். ஆயினும் உமக்கு எட்டடி வேண்டுமோ, உமக்கு எய்டமாத்திரம் வேண்டுமோ அப்படியே அம்மாத்திரந்தானே எனக்கும் வேண்டும். என் புத்திக்குப் பிரகாசத்தையும், என் இருதயத்திற்குச் சிநேக அக்கினி யையும் கட்டளையிட்டருளும். என் ஆத்துமத்தை ஆசீர்வதித்தருளும்.

என் சர்வேசுரா, நான் செய்த இவ்வளவு பாவங்களுக்காக உத்தரிக்கவும், பின்னுக்கு வருகிற தந்திரங்களைத் தள்ளவும், என்னிடத்திலிருக்கிற மிருக குணங்களை அடக்கவும், எனக்கடுத்த புண்ணியங்களைச் செய்யவும் எனக்கு வேண்டிய தைரியத்தைக் கட்டளையிட்டருளும்.

சுவாமீ , என் இருதயத்தில் உமது பேரில் உருக்கம் வருவித்தருளும். எனக்கு என் பேரில் வெறுப்பும், உலகத்தின் பேரில் அருவருப்பும், புறத்தியாரை ஈடேற்ற ஆசையும் வரப்பண்ணும்.

என் ஆண்டவரே, என் சிரேஷ்டருக்குக் கீழ்ப்படிந்திருக்கவும், எனக்குச் சிறியோர் பேரில் தயவாயிருக்கவும், தரித்திரர் போரில் இரங்கவும், சிநேகிதருக்குப் பிரமாணிக்கமாக இருக்கவும், சத்துருக்களுக்கு உபகாரியாக இருக்கவும் கிருபை செய்தருளும்.

என் கர்த்தரே, என் சரீர சிற்றின்பத்தை ஒறுத்தலினால் ஜெயிக்கவும், தானத்தினால் உலோபத்தைத் தள்ளவும், மதுர குணத்தால் கோபத்தை அடக்கவும், பக்தியால் கோழைத்தனத்தைப் போக்கவும் கிருபை செய்தருளும்.

என் சர்வேசுரா, என் கருத்தில் விவேகியுமாய், இக்கட்டில் திடகாத்திரமுள்ளவனுமாய், துன்பத்தில் பொறுமையுள்ளவனுமாய், செல்வத்தில் தாழ்ச்சியுள்ளவனுமாய் இருக்கச் செய்தருளும்.

என் செபத்தியானங்களில் பராக்கின்றி, சாவதானமாய் சாப்பாட்டில் மட்டும் திட்டமுள்ளவனுமாய், தொழிலில் ஜாக்கிரதையுள்ளவனுமாய் இருக்கச் செய்தருளும்.

என் ஆண்டவரே, நான் எப்போதும் சுத்த இருதயத்துடனே இருக்கவும், தரம் வார்த்தையாய்ப் பேசவும் நல்ல ஒழுக்கமாய் நடக்கவும் உமது திரு ஏவுதலைக் கட்டளையிட்டருளும்.

சுவாமி, இடைவிடாமல் என் சுபாவ குணங்களைக் கீழ்ப் படுத்தவும், பிரசாதத்தில் வர்த்திக்கவும் கற்பனைகளை அனுசரித்து ஈடேறவும் கடவேன்.

சுவாமீ இவ்வுலகத்தின் நீசத்தனம் எவ்வளவென்றும், மோட்சப் பாக்கியம் எத்தனை பெரிதென்றும் காட்டும். இவ்வுலக அவிய காலம் எத்தனை சீக்கிரமாய் முடியுமென்றும், நித்தியத்தின் அளவு எத்தனை விசாலமென்றும் அறிவியும்.

என் சுவாமி, நான் சாவுக்கு ஆயத்தம் செய்யவும், உம்முடைய நீதிக்கு அஞ்சவும், நரகத்திற்குத் தப்பவும் கடைசியாக சேசுகிறீஸ்து நாதருடைய பேறுகளினால் நித்திய சீவியத்தை அடையவும் கிருபை செய்தருளும்.

ஆமென்.