உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக பிதாவாகிய சர்வேசுரனிடம் மன்றாட்டு.

மூன்று சுத்தவாலிபர்களை நெருப்புச்சுவாலையிலிருந்து காப்பாற்றினவருமாய், தீர்க்கதரிசியான தனியேலைச் சிங்கக் கெபியிலிருந்து மீட்டிரட்சித்தவருமாய், எல்லா வேதனைகளிலும் வேதசாட்சிகளை ஸ்திரப்படுத்தினவருமாயிருக்கிற சர்வேசுரா ! நாங்கள் உமது சந்நிதியிலே பொழிகிற ஜெபங்களைக் கிருபையாய் ஏற்றுக்கொண்டு உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பினின்றும் சகல வேதனைகளினின்றும் மரித்தவர்களுடைய ஆத்துமங்களை மீட்டுக் கொண்டு பிரதாபமுள்ள உமது சமூகத்துக்கு வரப்பண்ண வேணுமென்று தேவரிரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். சுவாமி,

ஆமென்.