பாடுபட்ட சிலுவையில்: அர்ச். சிலுவை... விசுவாச மந்திரம் சொல்லவும்.
3 வெள்ளை மணிகளில்: தமதிரித்துவத்தை நினைத்து 3 பரலோக மந்திரம் சொல்லவும்.
பிதாவுக்கும்...
13 சிவப்பு மணிகளில்:
முதல்: அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளே வாழ்க! மரியன்னைக்குப் பின் உமது தெய்வீக மணாளனிடம் எனக்காக மனுப் பேசுகிறவளே! இப்பொழுதும் என் மரண நேரத்திலும் எனக்காக மன்றாடும்.
துணை: சேசு மரியாயின் அன்புள்ள குமாரத்தியே! உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பதக்கத்தில்: புகழ் மிக்க அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளே! சேசுவுக்காக தைரியமாய் உம் இரத்தத்தை சிந்தினீரே. உமது வாழ்விலும் விசேஷமாய் உம் மரணத்தில் ஆண்டவர் உம்மீது பொழிந்த எல்லா வரங்களுக்காகவும் அவரை வாழ்த்துகிறேன். மகிமையாலும் வல்லமையாலும் அவர் உம்மை முடிசூட்டியதற்காக அவரைத் துதித்து மகிமைப்படுத்துகிறேன். உமது மன்றாட்டின் வழியாக அவரிடம் நான் கேட்கும் வரப்பிரசாதங்களை...பெற்றுத் தருவீராக!
ஆமென்.
குறிப்பு: இச்செபமாலையின் 13 சிவப்பு மணிகள் அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளின் 13 வயதைக் குறிக்கும்.