என் தேவனே! உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவாசியாதவர்களுக்காகவும், உம்மை ஆராதியாதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசியாதவர்களுக்காகவும் மன்னிப்புக் கேட்கிறேன்.
மகா பரிசுத்த தமத்திரித்துவமே, பிதாவே, சுதனே, இஸ்பிரீத்து சாந்துவே! உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகமெங்குமுள்ள திவ்ய நற்கருணைப் பேழைகளில் இருக்கும் சேசுக்கிறிஸ்து நாதருடைய விலை மதிக்கப்படாத திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத் துக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சேசுவின் திரு இருதயத்தினுடையவும், மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களைப் பார்த்து, நிர்ப்பாக்கியப் பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன்.
ஓ என் சேசுவே, எங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எல்லா ஆன்மாக்களையும், விசேமாய், யார் அதிகத் தேவையிலிருக்கிறார்களோ அவர்களையும் மோட்சத்திற்கு அழைத்தருளும்.
ஓ என் சேசுவே, எங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எல்லா ஆன்மாக்களையும், விசேமாய், யார் அதிகத் தேவையிலிருக்கிறார்களோ அவர்களையும் மோட்சத்திற்கு அழைத்தருளும்.
பாவிகளுக்காக உங்களைப் பலியாக்குங்கள். அடிக்கடி, குறிப்பாக நீங்கள் ஏதாவது ஒரு பரித்தியாகம் செய்யும்போது: “ஓ சேசுவே! உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இதைச் செய்கிறேன் என்று சொல்லுங்கள்.