ஓ! மகா உன்னத மகத்துவம் பொருந்திய அர்ச். அந்தோனியாரே! சகல நன்மைகளும் நிறையப் பெற்ற அப்போஸ்தலரே! தேவரீர் (காணாமற் போன பொருளைத் திரும்பக் கண்டடையச் செய்கிற) புதுமைகளைச் செய்யும் வரத்தை ஆண்டவரிடமாக அடைந்திருக்கிறீரே. (நான் தொலைத்த பொருளைத் திரும்பக் கண்டடையும் படிக்கு) உமது ஆதரவைத்தேடி வந்திருக்கிற அடியேனுக்கு இத்தருணத்தில் உதவி புரிந்தருளும். தேவரீரைக் கொண்டு இப்பேர்க்கொத்த மேலான அதிசயங்களைச் செய்விக்கிற ஆண்டவரை நான் மென்மேலும் மகிமைப்படுத்திக் கொண்டாடி வருகிறேன்.
ஆமென்.