இடைவிடாமல் துதிக்கப்பட யோக்கியமுமாய் மிகுந்த மதுரமுள்ள பூசிதமுமாயிருக்கிற பரம திவ்விய நற்கருணைக்கே அனவரத காலமும் முடியாத ஆராதனையும் துதியும் தோத்திரமும் உண்டாகக் கடவது.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்து எப்போதும் பரிசுத்த கன்னியாஸ்திரியுமாய் நமது ஆண்டவளுமாய்க் கொண்டாடப் பட்டவர்களுமாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட தேவ மாதாவினுடைய அமலோற்பவத்துக்கும் அர்ச்சியசிஷ்ட சூசையப்பருடைய பாக்கியமான மரணத்துக்குமே தோத்திரமுண்டாகக் கடவது.
தேவ வரப்பிரசாதத்தின் தாயே! இரக்கத்தின் மாதாவே! அர்ச்சியசிஷ்ட மரியாயே! எங்கள் மாற்றானுடைய சோதனையிலேயும், மரண நேரத்திலேயும், உமது திருக்குமாரனை வேண்டி, எங்களைக் காக்கவும், ஆளவும், கைக்கொண்டு நடத்தவும் வேணுமென்று உமது திருப்பாதம் முத்தி செய்து உம்மை மன்றாடுகிறோம்.
ஆமென்.