சுவாமி கிருபையாயிரும்.
கிறீஸ்துவே கிருபையாயிரும்.
சுவாமி இவன்(ள்)மேல் தயையாயிரும்.
1 பர.
சர்வேசுரனுக்கு உகந்த சகல அர்ச்சியசிஷ்டவர்களே, இவனுக்குச் சகாயமாக வாருங்கள். அர்ச்சிய பிரபுத்துவங்களைக் கொண்டிருக்கிற பக்திச்சுவாலகரே, ஞானாதிக்கரே, பத்திராசனரே, நாதகிருத்தியரே, சத்துவகரே, பலவத்தரே, பிராதமிகரே, அதிதூதரே, தூதரே, இவனுக்கு எதிர் கொண்டு வந்து இவனுடைய ஆத்துமத்தைக் கூட்டிக் கொண்டுபோய் பராபர கர்த்தருடைய சந்நிதியிலே விடுங்கள்.
இப்பரதேசத்தை விட்ட ஆத்துமமே, அனந்த காருண்ணிய கிறீஸ்துவானவர் இன்றைக்கு உன் னைத் தம்முடைய திருவடியாராகிய அறவோ ருடைய சமுதாயத்தில் அழைத்தருளுவாராக. தமது தேவ சந்நிதியில் உன்னை வைத்துக் கொள் வாராக. சம்மனசுக்கள் ஆபிரகாம் இருக்கிற ஸ்தலத்துக்கு உன்னை அழைத்துக் கொண்டுபோய் விடக்கடவார்களாக.
1 பர.
( தீர்த்தம்)