சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்கக் காரணமாயிருந்த இரக்கத் தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
சகலமும் சிருஷ்டிக்கப்பட காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
எங்களை தினமும் அர்ச்சிக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
மகா பரிசுத்த திரித்துவத்தின் பரம இரக சியத்தை எங்களுக்கு வெளிப்படுத்தக் காரணமா யிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
கடவுளின் சர்வ வல்லமையை மானிடருக்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
பரலோக சம்மனசுக்களை சிருஷ்டிக்கக் காரண மாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை உரு வாக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
உலகம் முழுவதையும் பரிபாலிக்கும் இரக்கத் தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
எங்களுக்கு நித்திய வாழ்வை அருளக் காரண மாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
நாங்கள் அடையவிருந்த தண்டனைகளி லிருந்து எங்களைக் காப்பாற்றி வரக் காரணமா யிருக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
பாவச் சேற்றிலிருந்த எங்களை மீட்டுக் கைதூக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
மனித அவதாரத்தையும், பாடுகளையும் மரணத்தையும் ஏற்றுக் கொள்ளக் காரணமா யிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
சகல மனிதருக்கும் எப்பொழுதும் எல்லா விடங்களிலும் உதவியளிக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
உமது வரப்பிரசாதங்களை முன்னதாகவே எங்களுக்கு அருளக் காரணமான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
தெய்வீகப் பரம இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் துலங்கச் செய்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
சத்தியத் திருச்சபையை ஸ்தாபித்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
தேவ திரவிய அனுமானங்களின் கொடைகளில் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
ஞானஸ்நானத்திலும் பச்சாத்தாபத்திலும் நீர் அருளும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
திவ்விய நற்கருணையிலும் குருத்துவத்திலும் நீர் தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
பாவிகளை மனம் திருப்புவதில் நீர் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
அவிசுவாசிகள் ஒளி பெறுவதில் நீர் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
நீதிமான்களின் அர்ச்சிப்பில் நீர் வெளிப்படுத் திய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
உமது திருக்காயங்களிலிருந்து சுரந்தோடிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
உமது மகா பரிசுத்த திரு இருதயத்திலிருந்து சுரக்கும் இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
இரக்கத்தின் தாயாக பரிசுத்த தேவ மாதாவை எங்களுக்குத் தர காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
நோயாளிகளுக்கும் துன்பப்படுவோருக்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
நொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
கதிகலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
மரிப்போரின் அடைக்கலமாகிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் ஆறுத லான இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
சகல அர்ச்சியசிஷ்டவர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
இரட்சிக்கப்பட்டவரின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
அற்புதங்களின் வற்றாத துணையாகிய இரக்கத்தின் அரசராகிய சேசுவே, சேசுவே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
ஆண்டவருடைய இரக்கம், அவருடைய சகல சிருஷ்டிப்புக்கள் பேரிலும் உள்ளது. ஆதலால் ஆண்டவருடைய இரக்கத்தை என்றென்றைக்கும் பாடுவோம்.
பிரார்த்திக்கக் கடவோம்.
மகா தயை நிறைந்த சர்வேசுரா! இரக்கத்தின் தந்தையே, ஆறுதலின் தேவனே, உம்மில் விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே; உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் பெரிய சோதனைகளிலும், உமக்குப் பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் வரப்பிரசாதங்களை எங்கள் மீது நிறையப் பொழிந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதாகாலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுக்கிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.
ஆமென்.