ஜெபமாலை வியாகுல காரணிக்கம் ஐந்து
பிதாவுடையவும் சுதனுடையவும்....
திவ்விய இஸ்பிரீத்துவே....
(1) பிரார்த்திக்கக்கடவோம்
வியாகுலம் மிகுந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் எங்களுக்காகப் பாடுபடத் துவங்கி, பூங்காவனத்திலே அநாதி பிதாவை நோக்கி வேண்டுதல் செய்திருக்கும்போது சர்வாங்கமும் உதிரமாக வேர்த்ததினால் மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, நாங்கள் செய்கிற சகல நற்கிரியைகளையும் சர்வேசுரனுக்கு வேண்டுதலோடே துவக்கவும் முடிக்கவும் எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும். ஒரு பர, பத்து அருள், ஒரு திரி.
(2) பிரார்த்திக்கக்கடவோம்
வியாகுலம் மிகுந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் கற்றூணிலே கட்டுண்டு அடிபட்டதினால் மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, எங்கள் பாவத்துக்கு வருகிற ஆக்கினையைச் சர்வேசுரன் விலக்கத்தக்கதாக எங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொள்ளும். ஒரு பர, பத்து அருள், ஒரு திரி.
(3) பிரார்த்திக்கக்கடவோம்
வியாகுலம் மிகுந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரனுக்குப் பரிகாச ராஜாவாக முள்முடி தரித்ததினால் மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, உலகத்தார் எங்களுக் குப் பண்ணுகிற பரிகாச நிந்தனைகளை, நாங்கள் நல்ல மனதோடு பொறுத்துக்கொள்ள எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும். ஒரு பர, பத்து அருள், ஒரு திரி.
(4) பிரார்த்திக்கக்கடவோம்
வியாகுலம் மிகுந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் பாரமான சிலுவையைச் சுமந்து கபால மலைக்குப் போகிறதைக் கண்டு மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, எங்கள் பாவத்தினுடைய பாரமும் கஸ்தியும் குறையத்தக்கதாக எங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொள்ளும். ஒரு பர, பத்து அருள், ஒரு திரி.
(5) பிரார்த்திக்கக்கடவோம்
வியாகுலம் மிகுந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் சிலுவையிலே அறையுண்டு மரித்ததைக் கண்டு மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, நாங்களும் அவருடைய நேசத்துகாக எங்கள் பிராணனைக் கொடுக்கத் தயவோடிருக்கும்படி எங்களுக்காகப் பிரார்த் தித்துக் கொள்ளும். ஒரு பர, பத்து அருள், ஒரு திரி.
குறிப்பு : (ஐந்து 10 மணிக்குத் தனித்துச் சொன்னால் 5 வருஷ பலன். மற்றவர்களோடு சொன்னால் 10 வரு பலன். பாவசங்கீர்த்தனம் பண்ணி நற்கருணை பெற்றும், சற்பிரசாதத்துக்கு முன் எழுந்தேற்றமில்லாமலும் சொன்னால், பரிபூரண பலன். ஆசீர்வதிக்கப்பட்ட ஜெபமாலை யோடு சொன்னால் வேறுபலன்கள் உண்டு.)