(திருநாள் : அக்டோபர் 2)
அதிமிக பிரமாணிக்கம் அமைந்த காவலனே! அடியேனுக்குப் பிரியாத துணைவராக சர்வேசுரனால் நியமிக்கப்பட்டு எப்போதும் என்னண்டையிலிருந்து என்னை ஆண்டு நடத்தி வரும் சம்மனசானவரே இன்று (பெயர்) ஆகிய நான் உம்மை என் பாதுகாவலராகவும் அடைக்கலமாகவும் தெரிந்து கொண்டு என்றென்றைக்கும் என்னை முழுதும் உமது பராமரிப்பில் வைத்து விடுகிறேன். மேலும் நான் உமது மகிமைப் பிரதாபத்துக்கு விரோதமான எவ்வித வார்த்தைகளினாலும் கிரிகைகளினாலும் உம்மைவிட்டுப் பிரியாமலிருப்பதுமன்றி எனக்குக் கீழ்ப்பட்ட மற்றவர்களும் தேவரீருக்கு விரோதமாய் ஏதாவது சொல்லவும் அல்லது செய்யவும் விடுகிறதில்லையென்றும் பிரதிக்கினை பண்ணுகிறேன். ஆதலால் இன்று முதல் என் மரண பரியந்தம் உமது ஊழிய னாக என்னை ஏற்றுக் கொள்ளும். நான் செய்யும் சகல கிரியைகளிலும் எனக்கு ஒத்தாசை செய்து விசேஷமாய் என் மரணநேரத்தில் என்னைக் கைவிடாமல் காத்து இரட்சித்தருளும்.
ஆமென்.