அர்ச். சவேரியார் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச்சியசிஷ்ட இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். இஞ்ஞாசியாருக்கு சமயோக்கியமும் பிரியமுமுள்ள ஞானபுத்திரனாகிய அர்ச். சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிந்து தேசத்துக்கு அப்போஸ்தலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். பாப்பானவருடைய விசேஷ ஸ்தானாதிபதியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நித்திய சமாதானத்துக்குரிய சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வ நன்மையுள்ள சுவிசேஷத்தைப் போதித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அஞ்ஞான ஜனங்களுக்கும் இராஜாக்களுக்கும் சேசுநாதருடைய திருநாமமாகிய சுகந்தத்தைக் கொண்டுபோகத் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ இஷ்டப்பிரசாதம் நிறைந்த பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிந்துதேச சபையின் மேலான மகிமையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விசுவாசத்தைக் காப்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அஞ்ஞானத்தை மிகவும் வெறுத்து நீக்கு கிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுவிசேஷ சத்தியத்தின் உத்தம பிரசங்கியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசாசினுடைய விக்கிரகங்களை அழித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ தோத்திர வணக்கம் பரப்பச் செய்வ தற்கு எத்தனமாக நித்திய பிதாவினாலே தெரிந்து கொள்ளப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதரைக் கண்டு பாவித்துப் பிரமாணிக் கமாய்ப் பின்சென்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இஸ்பிரீத்துசாந்துவின் தொனியுள்ள எக்காளமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனுடைய திருச்சபைக்கு வச்சிரத் தூணே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அஞ்ஞானிகள் நன்னெறியில் திரும்புவதற்கு எத்தனமாகிய பிரகாசமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விசுவாசிகளின் போதகரான சற்குருவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சாங்கோபாங்கப் புண்ணிய நெறியில் தவறாது வழிகாட்டியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போஸ்தலருக்குரிய ஞானத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் உத்தம மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குருடருக்குப் பார்வை கொடுப்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சப்பாணிகளின் ஊனம் தீர்ப்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பஞ்சம், படை, நோயில் ஆதரவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசாசுக்களை ஜெயித்து ஓட்டுபவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிலுவையால் சத்துருக்கள் படையைத் துரத்தினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரித்தவர்களை உயிர்ப்பித்தவரே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமுத்திரத்தையும் புயலையும் கீழ்ப்படுத்தி அடக்கும் வல்லபத்தைக் கொண்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கடலும் மற்ற பூதியங்களும் உம் கட்டளைக்கு அடங்கிப் பணிவதால் பேர் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அதிசயமான அற்புதங்களைச் செய்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நல்ல மரணம் அடைவதற்கு உதவியாயிருப் பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தரித்திரருக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிந்து தேசத்தின் பிரகாசமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அட்சயமான ஆலயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுசபையின் சிறப்புள்ள அலங்காரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனவிருப்பத்துடன் மிகவும் தரித்திரராய் இருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மாறாத கற்புடைத்தானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குறையற்ற பொறுமை சிரவணமுள்ளவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அத்தியந்த தாழ்ச்சியால் விளங்கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆச்சரியமான தயையுள்ள பிரசன்னரானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதருடைய சிலுவைக்கும் பிரயாச வருத்தங்களுக்கும் மிகவும் ஆசைப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறர்சிநேக சாங்கோபாங்கம் அடைந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புறத்தியார் ஈடேற்றத்துக்காக எந்நேரமும் கவன விசாரமாயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ தோத்திரத்துக்கும் மனிதர் ஆத்தும நன்மைக்கும் அத்தியந்த பற்றுதலையும் சுறுசுறுப் பையும் கொண்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ சிநேகத்தின் பொக்கிஷமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமாக்களில் அநேகரின் அவதியைத் தீர்க்க மிகவும் உதவி யவரே,

சுகிர்த குணத்தினாலும் பரிசுத்த நடக்கை யினாலும் சம்மனசுபோல் தோன்றினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ சிநேகத்தாலும் சர்வேசுரனுடைய திருச் சனத்தை நடத்தின பராமரிக்கையாலும் பிதாப் பிதாவென்னத் தக்கவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பெற்ற வரத்தாலும் ஞானத்தாலும் தீர்க்க தரிசியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பேராலும், பேறுகளாலும் அப்போஸ்தலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல பாஷைகளிலும் அஞ்ஞான ஜனங்களுக் குச் சத்தியம் தெளிவித்த வேதபாரகரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுகிறீஸ்துவைப் பற்றிப் பிராணனைத் தரத் துணிந்த தாற்பரியத்தால் வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுகிர்த தவவொழுக்க நடக்கையால் ஸ்துதியரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆத்துமத்திலும் சரீரத்திலும் பரிசுத்த விரத்தரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ கிருபாகடாட்சத்தைக் கொண்டு சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய புண்ணியங்களினால் அலங்கரிக்கப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு  நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக, அர்ச். சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! முத்திப்பேறு பெற்ற சவேரியாருடைய ஞான போதகத்தினாலேயும், அவர் செய்த அற்புதங்களினாலும் சிந்து தேசத் திலுள்ள ஜனங்களைத் தேவரீருடைய திருச்சபை யிலே அழைத்து உட்படுத்தச் சித்தமானீரே.  அவரது நல்ல புண்ணியப் பலன்களைத் துதித்து வணங்கு கிற நாங்கள், அவரது சுகிர்த மாதிரிகைகளை அனுசரிக்க அனுக்கிரகம் செய்தருளும்.  இந்த மன்றாட்டுக்களை எல்லாம் சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும்.  

ஆமென்.