இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் சர்வேசுரனுடைய திருநாமம் வாழ்த்தப்படக் கடவது.
சுவாமி கிருபையாயிரும்.
கிறீஸ்துவே கிருபையாயிரும்.
சுவாமி இவன்(ள்)மேல் தயையாயிரும்... பரலோக மந்திரம்... (தீர்த்தம் தெளிக்கவும்.)
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வ வல்லபமும் அளவற்ற தயாளமுமுள்ள சர்வேசுரா! ஞானஸ்நானத்தினாலே ஞானப் பிறப்பை அடைந்து, இந்தப் பரதேசத்தை விட்டு நீங்குகிற குழந்தைகளுக்கு சொந்தப் புண்ணியப் பேறுகள் ஒன்றுமில்லாதிருந்தாலும் தேவரீர் உடனே அவர்கள் எல்லோருக்கும் நித்தியப் பேரின்ப சீவியத்தைத் தந்தருளுகிறதுபோல இந்தப் பிள்ளையின் ஆத்துமத்துக்கு இன்று தந்தருளினீர் என்று விசுவசிக்கிற அடியோர்கள் எப்பொழுதும் கன்னிகையாயிருக்கிற அர்ச். மரியாயினுடைய மன்றாட்டினாலும், சகல அர்ச் சியசிஷ்டவர்களுடைய வேண்டுதலினாலும் இவ்வுலகத்தில் பரிசுத்த இருதயத்தோடு உம்மை சேவிக்கவும், பரகதியில் முத்தரான மாசில்லாத குழந்தைகளோடுகூடத் தேவரீரைச் சதாகாலமும் தரிசிக்கவும் எங்களுக்குக் கிருபை செய்தருளும் சுவாமி. இந்த மன்றாட்டுகளையயல்லாம் சேசு நாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும்.
ஆமென்.
பாலர்களும் கன்னியர்களும் பாலரோடு விரத்தரும் சர்வேசுரனுடைய நாமத்தை ஸ்துதிக் கக்கடவார்கள்.
சுவாமி கிருபையாயிரும்.
கிறீஸ்துவே கிருபையாயிரும்.
சுவாமி தயையாயிரும்.
பாலகர்களை நமதண்டையில் வர விடுங்கள். ஏனெனில் மோட்ச இராச்சியம் அப்படிப் பட்டவர்களுடையது.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வத்துக்கும் வல்லவருமாய் நித்திய சீவியரு மாய், மாசற்ற கற்புடையோருக்குப் பிரசன்ன கருணையுள்ளவருமாயிருக்கிற சர்வேசுரா! தேவரீர் இந்தப் பாலனுடைய ஆத்துமத்தை இன்று மோட்ச இராச்சியத்துக்கு அழைத்தருளக் கிருபை செய்தீரே. அடியோர்களுக்கும் கிருபை செய்து நாங்கள் பாவ தோஷமின்றிச் சீவித்து உம்முடைய உபத்திரவ மான திருப்பாடுகளின் பலன்களினாலும், மோட்ச பாக்கிய சம்பன்னரான அர்ச். கன்னிமரியம்மாள் முதல் சகல மோட்சவாசிகளுடைய வேண்டுதலினாலும், உம்மாலே தெரிந்துகொள்ளப்பட்ட சகல அறவோர்களோடு முடிவில்லாத மோட்ச இராச்சியத்தில் களிகூர்ந்திருக்க அனுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும்.
ஆமென்.
கிருபைதயாபத்து மந்திரம் சொல்லவும்.